பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த உதவ வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த உதவ வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்
Updated on
1 min read

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கொல் கத்தாவுக்கு நேற்று வந்த அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது:

நாடாளுமன்றம் செம்மையாக செயல்பட அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்துவதும் விவாதித்து முடிவு எடுப்பதும் முக்கியமான பணியாகும். இதுதான் எம்.பி.க்கள் அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஆட்சேபம் இருந்தால் அது பற்றி விவாதிப்பதற்கு போதிய கால அவகாசம் இருக் கிறது. மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து விவாதித்து முடிவு காண வேண்டும். எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர அரசு தயாராக உள்ளது.முக்கிய சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. சில சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கின்றன.

எதிர்க்க விரும்பினால் அதை செய்யுங்கள். ஆனால் அதை நாடாளுமன்றம் தீர்க்க அனுமதி யுங்கள். இதுதான் கொள்கையாக இருக்க வேண்டும்.

அவசர சட்டங்கள் அரசியல் நோக்கில் கொண்டுவரப்பட வில்லை மக்கள் நலனை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டவை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23-ம்தேதி தொடங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in