ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் மையம் கொண்டு ரிக்டர் கோளில் 5.3 என்ற அளவில் பதிவானதாக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இரவு நேரத்தில் பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தால் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் பீதியடைந்து தங்களது வீடுகளிலிருந்து வெளியேறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in