ஆவண திருட்டு வழக்கு: மேலும் ஒருவர் கைது

ஆவண திருட்டு வழக்கு: மேலும் ஒருவர் கைது
Updated on
1 min read

மத்திய அரசு அலுவலகங்களில் ஆவணங்களை திருடிய வழக்கில் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படும் 13-வது நபர் இவர்.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறியதாவது, "கைது செய்யப்பட்ட விரேந்தர் குமார், பெட்ரோலிய அமைச்சகத்தில் பணியாற்றியவர். இவர், போலி அடையாள அட்டை, போலி லெட்டர் ஹெட் ஆகியனவற்றை தயாரித்து வழங்கியுள்ளார். பெட்ரோலிய அமைச்சகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் ஏதும் திருடப்படவில்லை" என தெரிவித்துள்ளது.

அரசு அலுவல கத்தில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் நுழைந்துள்ளனர். அவர்கள் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பலத்த பாதுகாப்பை எளிதாக கடந்து சென்றுள்ளனர்.

மேலும் போலி சாவிகளை பயன்படுத்தி பெட்ரோலிய அமைச்சக அலுவலக கதவுகள், பீரோக்களை திறந்து ஆவணங்களை திருடியுள்ளனர். இதற்கு அலுவலக ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in