

டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளரான கிரண் பேடியின் தேர்தல் பிரச்சார பொறுப்பாளர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
நரேந்திர டாண்டன், டெல்லி பாஜக மூத்த தலைவரான இவர் கிரண் பேடியின் தேர்தல் பிரச்சார பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து கடிதத்தை பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்தார்.
அக்கடிதத்தில் அவர், "டெல்லி பாஜக தொண்டர்களுக்கு கிரண் பேடி உத்தரவுகள் பிறப்பிக்கும் விதத்தை என்னால் சற்றும் சகித்துக் கொள்ளமுடியவில்லை" என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கிரண் பேடி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக ஏற்கெனவே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கிரண் பேடியின் தேர்தல் பிரச்சார பொறுப்பாளர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.