ரயில்வே பட்ஜெட் 2015 - சிறப்பு அம்சங்கள்

ரயில்வே பட்ஜெட் 2015 - சிறப்பு அம்சங்கள்

Published on

ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

* நிலக்கரி, சிமென்ட், உருக்கு ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் அதிகரிக்கப் பட்டுள்ளது.

* புதிய ரயில்கள் எதுவும் அறி விக்கப்படவில்லை.

* அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய் யப்படும்.

* தற்போது 60 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இனிமேல் 120 நாட் களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

* ரயில்களின் வருகை, புறப்படும் நேரம் குறித்து பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும்.

* பயணிகளின் பாதுகாப்புக்காக 182 இலவச தொலைபேசி வசதி அறிமுகம்.

* ரயில்வே உதவி தொலைபேசி எண் 138 சேவை 24 மணி நேர சேவையாக மாற்றம்.

* பயணிகள் புகார்களை தெரி விக்க மொபைல் போன் ஆப்ஸ் அறிமுகம்

* ரயில் நிலையங்களில் முன்பதி வில்லாத டிக்கெட்டுகளை ஐந்து நிமிடங்களில் பெற்றுக் கொள்ள சிறப்பு வசதி.

* மூத்த குடிமக்கள், கர்ப்பிணி கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளுக்கு ரயில்களில் கீழ்படுக்கைக்கு முன்னுரிமை.

* மேல் படுக்கைகளில் எளிதாக ஏறிச் செல்ல மடக்கு ஏணி வசதி.

* வயது முதிர்ந்தோர், ஊனமுற் றோர் வசதிக்காக வீல் சேர் களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி.

* 400 ரயில் நிலையங்களில் வை-பை இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

* பெண்களின் பாதுகாப்புக்காக புறநகர் ரயில்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இந்த வசதி குறிப்பிட்ட சில தொலைதூர ரயில்களிலும் ஏற்படுத்தப்படும்.

* கூட்டநெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட ரயில்களில் 24 முதல் 26 பெட்டிகள் வரை இணைக்கப்படும்.

* ரயில்களில் மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி.

* விவசாயிகளுக்காக கிசான் யாத்ரா ரயில் சேவை.

* மும்பை- அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்க ஆய்வு.

* 9 ரயில் தடங்களில் ரயில்களின் வேகம் 160 முதல் 200 கி.மீயாக உயர்த்தப்படும்.

* ரயில்வே, தனியார் நிலங்களில் சோலார் பேனல்கள் அமைத்து 1,000 மெ.வாட் சூரிய சக்தி மின் சாரம் தயாரிக்கப்படும்.

* ரயில்வே பாதைகளை மேம் படுத்தவும் விரிவுபடுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப் படும்.

* மும்பை புறநகர் ரயில் சேவை யில் ஏசி பெட்டிகள் அறிமுகம்.

* ரயில்வே வேலைவாய்ப்பில் ஆன்லைன் மூலம் விண்ணப் பம்.

* நடப்பாண்டில் மேலும் 17,000 கழிப்பறைகள் பயோ கழிப் பறைகளாக மாற்றப்படும்.

* ரயில் நிலையங்களின் தூய் மைக்கு முன்னுரிமை.

* ரயிலின் பாதுகாப்பான பயணத் துக்கு உறுதி.

* ரயில்வே கார்டுகளுக்கு யோகா பயிற்சி.

* ரயில்வே திட்டங்கள், பணி களில் இஸ்ரோவின் உதவி, ஆலோசனை பெறப்படும்.

* 3438 ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளை அகற்ற ரூ.6581 கோடி ஒதுக்கீடு.

* நான்கு பிராந்தியங்களில் ரயில்வே பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

* டிக்கெட் பரிசோதகர்களிடம் காகித முன்பதிவு பட்டியலுக்கு பதிலாக மின்னணு கருவிகள் வழங்கப்படும்.

* தற்போது நாடு முழுவதும் நாளொன்றுக்கு 2.1 கோடி பேர் ரயில்களில் பயணம் செய் கின்றனர். இந்த எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்கப்படும்.

* ரயில் பாதைகளின் நீளம் மேலும் 20 சதவீதம் நீட்டிக்கப் படும். அதன்படி தற்போதுள்ள 1,14,000 கி.மீட்டர் தொலைவு ரயில் பாதைகள் 1,38,000 கி.மீட்டராக விரிவுபடுத்தப் படும்.

* ரயில்வே துறையில் தற்போது ஆண்டுக்கு 100 கோடி டன் சரக்குகள் கையாளப் படுகின்றன. இந்த எண் ணிக்கை 150 கோடி டன்னாக அதிகரிக்கப்படும்.

* மொத்த நிதியில் 67 சதவீதம் பயணிகள் நலன் சார்ந்த அடிப் படை வசதிகளுக்காக செல விடப்படும்.

* 10 பெரிய நகரங்களில் சேட்டி லைட் ரயில் முனையங்கள் அமைக்கப்படும்.

* ரூ. 96 ஆயிரம் கோடியில் 77 விரிவாக்க திட்டங்கள் செயல் படுத்தப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in