இறுதிவாதம் நிறைவு: ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு?

இறுதிவாதம் நிறைவு: ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு?
Updated on
2 min read

சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுதாகரன், இளவரசியின் தரப்பில் ஆஜரான சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான சுதந்திரம், சுதா கரனுக்கும், இளவரசிக்கும் 1991-க்கு முன்பிருந்தே தனித்தனியான தொழி லும், வருமானமும் இருந்தது. பொது ஊழியரான‌ ஜெயலலிதாவை அவர்கள் குற்றம் செய்ய தூண்டவில்லை. ஜெய லலிதாவின் சொத்துகளை அதிகமாக காட்ட வேண்டும் என்பதற்காக சுதாகரன், இளவரசியின் சொத்துகளை யும் அவரது கணக்கில் சேர்த்துள்ளனர்.

எனவே பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் இவ்வழக்கில் அளித்த தண்டனை குற்றவாளிகளை மட்டு மில்லாமல் வழக்கறிஞரையும் பாதித் துள்ளது. நீதியை நிலைநாட்டும் வகையில் இந்த நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்'' எனக் கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மெடோ அக்ரோ ஃபார்ம்,லெக்ஸ் பிராப்பட்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. இந்த நிறுவனங்களுக்காக மூத்த வழக்கறிஞர்கள் உதய ஹொள்ளா, ஜெயகுமார் பாட்டீல் ஆகியோர் ஆஜராகினர்.

முதலில் இந்தோ தோஹா கெமிக் கல்ஸ், சைனோரா எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்காக மூத்த வழக்கறிஞர் ஜெயகுமார் பாட்டீல் வாதிட்டதாவது:

இந்தோ தோஹா நிறுவனத்திற்கு சொந்தமாக அசையா சொத்துகள் எதுவும் இல்லை. ஆனால் கீழ்நீதி மன்றம் எங்களது நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அடிப்படையிலே இந்த தீர்ப்பு முரணாக உள்ளது. எனவே இவ்வழக் கில் இருந்து இந்தோ தோஹா நிறு வனத்தை விடுவிக்க வேண்டும்'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''இத்தனை ஆண்டுகளாக உங்களது நிறுவனத்தையும், அதன் சொத்துகளை யும் விடுவிக்கக்கோரி நீதிமன்றத்தில் முறையிட்டீர்களா?'' என கேள்வி எழுப் பினார். அதற்கு வழக்கறிஞர் ஜெய குமார் பாட்டீல், ''1999-ம் ஆண்டு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகிய போது எங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது. எனவே இதை கருத்தில் கொள்ளாமல் எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் எங்களது நிறுவனத்தை பறிமுதல் செய்தது தவறு'' என்றார்.

பவானிசிங் வாதிட உத்தரவு

சைனோரா எண்டர்பிரைசஸ் நிறுவனத் திற்காக வழக்கறிஞர் ஜெயகுமார் பாட்டீல் வாதிடும்போது, ''சைனோரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் பாஸ்கர ரெட்டி,நாராயணராவ் என்பவருக்கு சொந்தமானது. இவ்வழக்கில் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நால்வருக்கும், இந்த நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட போது ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் இந் நிறுவனத்தில் பங்குதாரராக இல்லை. எனவே சைனோரா நிறுவனத்தை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்''என்றார்.

இறுதியாக நீதிபதி குமாரசாமி, ''தனியார் நிறுவனங்களின் வாதம் வருகிற திங்கள்கிழமையுடன் முடிந்துவிடும். அரசு தரப்பு இறுதிவாதமும் ஒரு சில நாட்களில் முடிந்துவிட்டால், தீர்ப்பு தேதியை அறிவித்துவிடுவேன்'' என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங்,' 'இறுதிவாதம் தயாரிப்பதற்காக எனக்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, “நீங்கள் இப்போதே இறுதிவாதத்துக்கான தயாரிப்புகளை தொடங்கி விடுங்கள். அநேகமாக வருகிற செவ்வாய்க்கிழமை முதல் நீங்கள் வாதிடலாம்'' எனக்கூறி, வழக்கை வருகிற திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

இறுதிவாதம் முடிந்துள்ளதால், பவானிசிங் வருகிற வாரத்தில் தனது இறுதிவாதத்தை முடித்துவிடுவார். இதையடுத்து வருகிற மார்ச் மாதம் நீதிபதி குமாரசாமி சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தனது தீர்ப்பை வழங்குவார் என கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சொன்னபடி 31 நாட்களில் முடித்த நீதிபதி

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் இறுதிவாதம் முடிய 18 ஆண்டுகள் ஆனது.எனவே மேல்முறையீட்டை 3 மாதத்துக்குள் முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, தான் பொறுப்பேற்ற முதல் நாள் சொன்னபடி, 31 நாட்களில் இறுதிவாதத்தை முடிக்க வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in