எத்தகைய மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கிறது இந்தியா?- காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சோனியா பேச்சு

எத்தகைய மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கிறது இந்தியா?- காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சோனியா பேச்சு
Updated on
1 min read

கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவைத் தேர்தல் சவால் குறித்து விரிவாக பேசினார்.

சோனியா காந்தி பேசியதாவது.

தேச ஒற்றுமையையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்க வரும் மக்களவைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய தேசத்தின் அடையாளமாக திகழும் இந்த இரண்டு கொள்கைகளும் தற்போது கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

பாஜ கட்சியினர், 10 ஆண்டு கால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு விடை கொடுங்கள், மாற்றம் ஏற்பட வேண்டும் என பிரச்சாரம் செய்வார்கள்.

ஆனால் அது எத்தகைய மாற்றம். அவர்கள் விரும்புவது ஆட்சி மாற்றம் இல்லை, இந்திய தேசத்தின் நாடித்துடிப்பையே மாற்ற விரும்புகிறார்கள்.

காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைக்க விரும்புகிறது, பாரதிய ஜனதா கட்சி மக்களை பிரித்தாள விரும்புகிறது.

இந்திய தேசம் அனைவருக்கும் ஆனது, ஆனால் பாஜக இந்திய தேசத்தை ஒரு சிலருக்கே உரித்தானது என்ற அளவில் மாற்ற முற்படுகிறது.

எனவே தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 21-ஆம் நூற்றாண்டிற்கான வலிமையான பாரதத்தை உருவாக்குவதும் இல்லை அரசியல் சித்தாந்தங்களில் பாரதத்தை சிக்க வைப்பதும் தொண்டர்கள் கைகளிலேயே இருக்கிறது". இவ்வாறு சோனியா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in