

காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாவட்ட எஸ்.பி. அல்தாப் கான் கூறும்போது, "சோபியானின் ஹெல்மா ஷெர்மால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்தனர். நேற்றிரவு என்கவுன்டர் தொடங்கியது. இதுவரை இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது" என்றார்.