

மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் பெட்டிகளை உள்நாட்டிலேயே, அதுவும் சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, பயணிகளின் வசதிக்காக நகரங்களுக்கிடை யிலான (இன்டர்சிட்டி) ரயில் முழு வதும் ஏ.சி.பெட்டிகளை அறிமுகப் படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றிய அறிவிப்பு 2015-16-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் ரயில்வே பட் ஜெட்டின்படி, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய 20 பெட்டிகளைக் கொண்ட மாதிரி ஏசி ரயில் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக் கப்படும். இதற்கான உதிரிபாகங் கள் அனைத்தும் உள்நாட்டு தயாரிப்பாக இருக்கும். இப்போது அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய பெட்டிகளை மட்டுமே இந்த தொழிற் சாலை தயாரித்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தைச் செயல் படுத்தவும் ரயில்வே அமைச்சகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, கிராங்க்ஸ், ஷாப்ட், ஆல்டர்நேட்டர்ஸ் மற்றும் போர்ஜ்டு வீல்ஸ் உள்ளிட்ட உதிரி பாகங்களை உள் நாட்டிலேயே தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வரும் 26-ம் தேதி தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பார்வையற்றவர்களின் வசதிக்காக, இனி அனைத்து புதிய பெட்டிகளையும் பிரெய்லி குறி யீடுகளுடன் தயாரிப்பது குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக உள்ளது. தினசரி பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நகரங் களுக்கிடையிலான ரயில்களில் அனைத்து பெட்டிகளையும் ஏ.சி. வசதியுடன் கூடியதாக அறி முகம் செய்வது குறித்தும் அறிவிக் கப்படும் என கூறப்படுகிறது.
தினசரி பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, இன்டர் சிட்டி ரயில்கள் 160 கி.மீ. வரையில் உள்ள இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டு வருகிறது.