

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசா ரணை கர்நாடக உயர்நீதிமன்றத் தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது சசி கலாவின் தரப்பில் கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.பசன்ட்,வழக்கறிஞர் மணிசங்கர் ஆகியோர் ஆஜராகினர்.
இதையடுத்து 8-ம் நாளாக சசிகலாவின் வழக்கறிஞர் ஆர்.பசன்ட் வாதிட்டதாவது:
1991-96 காலக்கட்டத்தில் சசிகலா, நமது எம்ஜிஆர், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ்,ஜெ.எஸ்.ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களையும் நிர் வகித்தார். இதில் ஜெயா, பப்ளி கேஷன்ஸ், நமது எம்ஜிஆர் ஆகிய இரு நிறுவனங்களில் மட்டுமே ஜெயலலிதா பங்குதாரராக இருந் தார். மற்ற நிறுவனங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை.
இந்நிலையில் 1997-ம் ஆண்டு ஜெயா பப்ளிகேஷன்ஸ்,ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ்.ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலத்தையும் கட்டிடங்களையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மதிப்பீடு செய்தனர்.
இதை மதிப்பிட்ட பொறியாளர் கள் வேலாயுதம்,ஜெயபால் ஆகியோர் மதிப்பீடு தொடர்பாக முரண்பட்ட வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எனவே அதனை ஏற்கக்கூடாது.
சசிகலா சொத்துகளின் மதிப்பு ரூ.27.6 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ரூ.10.52 கோடி மட்டுமே ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட சொத்தாக ஏற்றுக்கொண்டது. ஆனால் வருமான வரித்துறை கணக்கின்படி அவருக்கு ரூ.16.54 கோடி சொத்து சசிகலாவுக்கு இருந்தது. இதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ரூ.12 கோடி மிகைப்படுத்தி காட்டியது ஏன்?''என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நீதிபதி குமார சாமி அடுத்தகட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (பிப்.10) ஒத்திவைத்தார்.