Published : 04 Feb 2015 09:06 am

Updated : 04 Feb 2015 10:08 am

 

Published : 04 Feb 2015 09:06 AM
Last Updated : 04 Feb 2015 10:08 AM

டெல்லியில் தேவாலயம் மீது தாக்குதல்: மத்திய உள்துறைக்கு நோட்டீஸ் - மனித உரிமை ஆணையம் அனுப்பியது

டெல்லியில் தேவாலயம் மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப் படையிலும், ஆணைய உறுப்பினர் நீதிபதி சிரியாக் ஜோசப் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதன் அடிப்படையிலும் ஆணையம் தானாகவே முன்வந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த தேவால யத்தின் பாதிரியார் வின்ஸென்ட் சால்வெட்டோ சார்பில் காவல் துறையில் புகார் அளித்த வழக்கறிஞர் மனோஜ் வி.ஜார்ஜிடம் தொலைபேசியில் தகவல் பெற்றிருப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

தேவாலயத்தின் உண்டியலில் உள்ள பணம் மற்றும் மதிப்பு மிக்க பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படாததால் விஷமிகளின் நோக்கம் கொள்ளை அடிப்பது அல்ல எனவும், மத நம்பிக்கை களுக்கு பாதகம் விளைவிப்பது தான் என்றும் ஆணையம் கருதுகிறது. இது மக்கள் மத்தியில் மத ரீதியில் மோதலுக்கும் வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள புனித அல்போன்ஸா தேவாலயத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்த விஷமிகள் திவ்ய நற்கருணை பாத்திரம் உட்பட பல்வேறு பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர், டெல்லி தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் சில மாதங்களாக தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. இத்துடன் சேர்ந்து, குறுகிய கால இடைவெளியில் ஐந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

டெல்லியில் தேவாலயம் மீது தாக்குதல்மத்திய உள்துறைக்கு நோட்டீஸ்மனித உரிமை ஆணையம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author