Published : 16 Feb 2015 12:45 PM
Last Updated : 16 Feb 2015 12:45 PM

கோவா மாநிலம் பனாஜி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

கோவா மாநிலம் பனாஜி தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. பனாஜி தொகுதியை மீண்டும் பாஜக தக்கவைத்துள்ளது.

பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலினேகர் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 5,368 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றியடைந்தார்.

பனாஜி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மனோகர் பரிக்கர் மத்திய பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

பாஜக, காங்கிரஸ், சுயேச்சை என மொத்தம் 4 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலினேகர் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 9,989.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x