

மத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் மருத்துவ அதிகாரி கள் உள்ளிட்ட அரசு பதவிக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட் டுள்ளது. இக்குழு ஜபல்பூர் உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், முன்னாள் மாநில முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் போபாலில் உள்ள சிறப்புப் புலனாய்வுக் குழ அலுவலகத் துக்கு நேற்று சென்றார். அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவி வகித்து வரும் சிவராஜ் சிங் சவுகானுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
முதல்வரும் அவரது அலுவலக மும் முறைகேட்டில் ஈடுபட்டதற் கான ஆதாரத்தை சிறப்புப் புல னாய்வுக்குழு திரட்டி உள்ளதாகக் கூறி அந்த ஆவணத்தைக் காண்பித்தார். தவறை மூடி மறைக்கும் வகையில் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு ஹார்டு டிரைவிலிருந்த ஆவணங்களிலிருந்து முதல்வர் உள்ளிட்ட சிலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் கூறும்போது, “காங்கிரஸார் ஏற்கெனவே முதல்வர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அது நிரூபிக்கப் படவில்லை” என்றார்.