Published : 10 Feb 2015 10:00 AM
Last Updated : 10 Feb 2015 10:00 AM

டெல்லி மக்கள் தீர்ப்பு சொல்லும் செய்தி என்ன?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று தனிப் பெரும்பான்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. படேல் நகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் கோலாகலமாக காட்சியளிக்கிறது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பலவும் ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருந்தன. அதற்கேற்பவே தேர்தல் முடிவுகளும் உள்ளன. கடந்த முறைபோல தொங்கு சட்டசபை அமைவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.

வெறும் 49 நாட்களில், வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு பாதியிலேயே சென்றுவிட்டார் என கேஜ்ரிவாலை குறிவைத்து பிரச்சாரம் செய்தது பாஜக.

கேஜ்ரிவாலுக்கு சரியான சவாலாக இருக்க வேண்டும் என பாஜக முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி களமிறக்கப்பட்டார்.

ஆனால், அமித் ஷா தேர்தல் வியூகம், பாஜக தீவிர பிரச்சாரம், வேட்பாளராக கிரண் பேடி களமிறக்கப்பட்டது என இவை எவையும் டெல்லி மக்கள் மத்தியில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், டெல்லி மக்கள் தீர்ப்பு சொல்லும் செய்தி என்ன? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.