

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் அதைச் சார்ந்த மற்ற அமைப்புகளுக்கு தடைவிதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அதன் சார்பு அமைப்பு களான ஐஎஸ்ஐஎல், ஐஎஸ் ஆகியவற்றை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக் கும் அறிவிக்கை விரைவில் வெளியாகும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஐஎஸ் அமைப்பில் சேர இராக் - சிரியா செல்கின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு இறுதியில் நாடு திரும்பினார். மற்ற 3 பேர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைய லாம் என்று உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஆசிப் இப்ராஹிம் சமீபத்தில் எச்சரிக்கை செய்திருந்தார்.