Published : 24 Feb 2015 11:10 AM
Last Updated : 24 Feb 2015 11:10 AM

இவரைத் தெரியுமா?- கார்ல் டக்ளஸ் மேக்மில்லன்

$ வால்மார்ட் ஸ்டோர்ஸ் இன்கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இப்பொறுப்பை வகிக்கிறார்.

$ கோடை விடுமுறை யில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் சேர்ந்த இவர் 47 வயதில் நிறுவனத்தின் உயர் பதவியை அடைந்துள்ளார்.

$ 2005-ம் ஆண்டு இந்நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். 2009-ம் ஆண்டிலிருந்து இவர் மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கையால் நிறுவன கிளைகளின் எண்ணிக்கை 3 ஆயிரம் அதிகமாக திறக்கப்பட்டது.

$ இதனால் விற்பனையகங்களின் எண்ணிக்கை 6,300 ஆக உயர்ந்தது. வருவாய் 5,000 கோடி டாலர் அதிகரித்தது.

$ ஆப்பிரிக்க நாடுகளில் இயங்கிவந்த மாஸ்மார்ட் ஹோல்டிங் நிறு வனத்தை கையகப்படுத்தியதில் இவரது பங்களிப்பு அதிகம்.

$ இவர் உருவாக்கிய தினசரி குறைந்த விலை (இடிஎல்பி) எனும் உத்தி தற்போது அனைத்து நாடுகளில் உள்ள வால்மார்ட் விற்பனையகங்களிலும் பின்பற்றப்படுகிறது.

$ அர்கன்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் நிர்வாகவியலில் இளங் கலைப் பட்டமும், டுல்சா பல்கலைக் கழகத்தில் முதுகலை நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.

$ உலக பொருளாதார பேரவை இவருக்கு இளம் சர்வதேச தலைவர் என்ற விருதை வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x