புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏன்?- ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் விளக்கம்

புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏன்?- ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

புதிய ரயில்கள் அறிவிக்கப்படாது குறித்து ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

2015-16-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் அறிவிப்பு ஏதும் இடம் பெறதாது குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, "புதுப்பிக்கப்பட்டு வரும் ரயில்வே இருப்புப் பாதை பணிகள் நிறைவு பெற்றால்தான் புதிய ரயில்களை இயக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள முடியும்.

ரயில்வே இருப்புப் பாதை அதிகளவில் பயன்படுத்தப்படுவது, புதிய இருப்புப் பாதைகள் பணி தேக்கமடைந்துள்ளது, வேகக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஆகியன புதிய ரயில்களை அறிவிப்பதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளன.

எனவே, இந்த ஆய்வு முடிந்த பிறகு நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்" என்றார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.

ரயில்வே பட்ஜெட்டில் தங்கள் மாநிலத்துக்கு புதிய ரயில்களை அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் குவிந்திருந்த வேளையில் முதல் முறையாக புதிய ரயில் அறிவிப்பு இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் சுரேஷ் பிரபு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in