Last Updated : 27 Jan, 2015 10:23 AM

 

Published : 27 Jan 2015 10:23 AM
Last Updated : 27 Jan 2015 10:23 AM

பெயர் சொல்லி பேசும் அளவுக்கு மோடி, ஒபாமாவின் சிநேகம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான சிநேகம் குடியரசு தின விழாவில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

குடியரசு தினவிழாவுக்கு வருகை தந்த ஒபாமாவை காலை 9.56 மணிக்கு கரம்குலுக்கி வர வேற்றார் மோடி. அப்போது, ஒபாமாவின் வலது கரத்தை அரவணைத்தாற்போல் பிடித்திருந்தார் மோடி.

அணிவகுப்புகள் நடைபெற்ற போது, இரு தலைவர்களும் அடிக்கடி உரையாடிக் கொண்டனர். மோடி கூறுவதை வலப்பக்கமாக தலைசாய்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார் ஒபாமா.

இருவரின் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் நிறைந்திருந்தது. அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் வலம் வந்த போதும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளின் போதும் இருவரும் புன்னகைத்தபடியே பார்த்து ரசித்தனர். வீர தீரச் செயல்களுக்கான விருதுகளைப் பெற்ற சிறார்களைப் பார்த்து ஒபாமா கையசைத்து வாழ்த்தினார். எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் இரு சக்கர வாகனங்களில் செய்த சாகசத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார் ஒபாமா. அந்த வீரர்களைப் பார்த்து கட்டைவிரலை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஒபாமா.

குண்டு துளைக்காத கண்ணாடி அறைக்குள் இருந்தபடி மக்களைப் பார்த்து மோடி, ஒபாமா கையசைத்தனர். பின் அவர்களுடன் மிஷெல் ஒபாமாவும் இணைந்து கொண்டார்.

மோடி உரையாற்றும்போது மூன்று முறை பராக் ஒபாமாவின் முதல்பாதிப் பெயரான ‘பராக்’ என்பதை மட்டும் குறிப்பிட்டுப் பேசினார்.

அது இருவருக்கும் இடையே இருக்கும் பிணைப்பை உறுதி செய்வதாக இருந்தது. ஒபாமாவும் மோடி என்று மட்டும் குறிப்பிட்டுப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x