Last Updated : 02 Jan, 2015 09:14 AM

 

Published : 02 Jan 2015 09:14 AM
Last Updated : 02 Jan 2015 09:14 AM

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 சதவீதம் உயர்வு: போக்குவரத்து விதிமீறலுக்காக ரூ.65 கோடி அபராதம் வசூலிப்பு - பெங்களூருவில் 5 லட்சம் ஆட்டோக்கள் மீது வழக்கு

கடந்த 2014-ம் ஆண்டு பெங் களூருவில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் அபராத மாக ரூ.65.15 கோடி வசூலிக்கப் பட்டுள்ளது.

பெங்களூருவில் 2013-ம் ஆண்டைக் காட்டிலும் 2014-ம் ஆண்டு 22 சதவீதம் அதிக போக்கு வரத்து விதிமீறல்கள் அரங்கேறி யுள்ளன. 2014-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 36 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

போக்குவரத்து போலீஸார் கடிதம் மட்டுமில்லாமல் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் மின்னஞ்சல், குறுந்தகவல், ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவும், விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் அபராதத் தொகையை வசூலித்துள்ளனர்.

40 லட்சம் வழக்குகள்

பெங்களூரு மாநகர போக்கு வரத்து காவல் ஆணையர் தயானந்த், ‘தி இந்து'விடம் கூறிய தாவது:

2014-ம் ஆண்டு பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக சுமார் 40 லட்சம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபராதமாக ரூ.64.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது க‌டந்த 2013-ம் ஆண்டைக் காட்டிலும் ரூ.8 கோடி அதிகம். தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்தியதாக 11.5 லட்சம் வழக்குகளும், வேகமாக ஓட்டியதாக 10 லட்சம் வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாக 9 லட்சம் வழக்குகளும் பதிவாகியுள்ளன. தவறான‌ பாதையை பயன்படுத்தியதற்காக 5 லட்சம் வழக்குகளும், போக்கு வரத்து சிக்னல் விதிகளை மீறியதற் காக 5 லட்சம் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய தாக வாரம்தோறும் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 5 லட்சம் ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ. 1 கோடி அபராத மாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலித்த‌து, பயணிகள் அழைத்த இடத்துக்கு வர மறுத்தது, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட குற்றங்களின் கீழ் சுமார் 15 ஆயிரம் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் மீதான போலீஸாரின் அதிரடி நடவடிக்கை தொடரும்.

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல்கள் இதே வேகத்தில் தொடர்ந்து நடைபெற்றால் அபராத தொகை 2015-ம் ஆண்டு ரூ.100 கோடியை தொட வாய்ப்பிருக்கிறது. அபராத தொகை அதிகரிப்பது அரசுக்கு வருமானமாக இருந் தாலும்,இத்தனை லட்சம் பேர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது பெங்களூருவுக்கு அவமானம் ''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x