Published : 28 Jan 2015 08:16 PM
Last Updated : 28 Jan 2015 08:16 PM

நான் ஏழைகளுக்காக பேசுகிறேன், அதனால் என்னை குறிவைக்கிறார்கள்: மம்தா

வர்தமான் மாவட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் ஏழைகள் பக்கம் நிற்பதால் தன்னை சில அரசியல் சக்திகள் குறிவைக்கின்றன என்று பேசியுள்ளார்.

வர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற பூமி விழாவில் சுமார் அரை மணி நேரம் பேசிய மம்தா, தான் ஏழைகள் பக்கம் இருப்பதால் சிலர் என்னை குறிவைக்கின்றனர் என்ற தொனியில் பேசியுள்ளார். ஆனாலும், மாநில வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை வரவேற்பதிலும் தான் தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

“தொடர்ந்து நான் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதற்கும், என் மீது அவதூறு கிளப்புவதற்கும் காரணம் என்னவென்று தெரியுமா? ஏற்கெனவே சிலரது நலன்கள் நன்றாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் நலன்களில் மட்டும் நான் அக்கறை செலுத்தினால் என்னை வழிபடுவார்கள். ஆனால் நானோ ஏழை மக்களின் நலன்கள் விவகாரத்தில் எந்த வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் செயல்பட்டு வருகிறேன்.

என்னால் ஏழைகளின் நலன்களைத் தடுக்க முடியாது, என்னால் அது முடியாது, ஏழைகளுக்கு சாதகமாக இருப்பதற்காக என்னை அவதூறு செய்தால் செய்யட்டும், என்னால் ஏழைகளை விட்டு விடமுடியாது. மத்திய அரசின் 100 நாட்கள் வேலை திட்டம் மாநிலங்களை வந்தடைவதில்லை. நலம் சார்ந்த பட்ஜெட் நிதிக்குறைப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் நிலக்கரி, மின்சாரம், எரிவாயு, உரம் ஆகியவற்றின் விலைகள் ஏற்க்கொண்டே செல்கின்றன. ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது நலம் எந்த ஒரு ‘நல்லாட்சி’யும் ஏழைகளை விட்டுவிடுவதாக இருக்க முடியாது.

நான் ஏழைகளின் நலன் மீது கவனன் செலுத்தும் அதே வேளையில் தொழிற்துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றேன்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x