பிஹாரில் குளத்தில் 30 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

பிஹாரில் குளத்தில் 30 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
Updated on
1 min read

பிஹார் மாநிலம், கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் கிராம குளத்திலிருந்து 30 வெடிகுண்டுகளை போலீஸார் நேற்று கண்டெடுத்தனர்.

மட்டியாரி என்ற கிராமத்தில் உள்ள குளத்தில் கோணிப்பையில் வைத்து இந்த குண்டுகளை மர்ம நபர்கள் போட்டுள்ளனர். இந்நிலையில் கோணிப்பை அவிழ்ந்து குண்டுகள் வெளியே தெரிவதை கண்ட உள்ளூர் மக்கள் பொதியா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக போலீஸ் அதிகாரிகள் குளம் இருந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு 30 வெடிகுண்டுகளை போலீஸார் மீட்டனர்.

இதுகுறித்து பொதிய காவல்நிலைய அதிகாரி அகிலேஷ் குமார் கூறியதாவது:

குளத்தில் மீட்கப்பட்டவை நாட்டு வெடிகுண்டுகள் எனினும் அவை சக்திமிக்கவை. நீண்ட நாட்களாக தண்ணீரில் ஊறியதால் அவை வெடிக்கும் திறனற்றுப் போய்விட்டன. போலீஸாரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கிலோ அல்லது பதுக்கிவைக்கும் நோக்கிலோ சமூக விரோதிகள் இவற்றை குளத்தில் போட்டிருக் கலாம். இதுகு றித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in