Published : 28 Jan 2015 11:14 AM
Last Updated : 28 Jan 2015 11:14 AM

ஆளில்லா லெவல் கிராசிங்குகளை குறைக்க நிதியமைச்சகத்திடம் ரூ.20,000 கோடி கேட்க ரயில்வே துறை முடிவு

தொடர்ந்து நடைபெறும் விபத்து களைத் தடுக்கும் வகையில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளை அகற்றுவதற்காக ரூ.20 ஆயிரம் கோடியை நிதியமைச்சகத்திடம் கோருவது என ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள 30,348 லெவல் கிராசிங்குகளில், 11,563 கிராசிங்குகள் ஆளில்லாமல் செயல்படுகின்றன. ஆளில்லா லெவல் கிராசிங்குகளின் எண் ணிக்கையைக் குறைக்க ரயில்வே துறை திட்டமிட்டாலும், நிதிப்பற்றாக் குறை காரணமாக அதனைச் செயல்படுத்த முடியவில்லை.

ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இப்பிரச்சினை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி வரும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, திட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறும்போது, “அடுத்த 5 ஆண்டுகளில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்துக்காக மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி நிதியுதவியை நிதியமைச்சகத்திடம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்கள் செல்லும் பாதைக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆளில்லா லெவல் கிராசிங்குகளை ஆள் உள்ள கிராசிங்காக மாற்ற ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்படும்.

இதில் 60 லட்சம் ரூபாய் அங்கு உள்கட்டமைப்பு மற்றும் 3 கேட்மேன்கள் நியமனம் ஆகிய வற்றுக்காகவும், பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 40 லட்சமும் தேவைப்படும்.

ஆளில்லா லெவல் கிராசிங் இருக்கும் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ரயில் வரும் போது, எச்சரிக்கை செய்யும் விதத்தி லான தொழில்நுட்பத்தை வடி வமைக்கும்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (இஸ்ரோ) ரயில்வே அமைச்சகம் அணுகியுள் ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x