

டெல்லியில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மதன்லால். இவர் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு தம் ஆதரவாளர்களுடன் பேசுவது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, யூ டியூபில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் மதன்லால், “ஜனவரி 20-ம் தேதி கேஜ்ரிவால் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஊர்வலம் செல்லும்போது, இது வரை இல்லாத வகையில் அதிக மானவர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும். அதற்காக, ஊர்வலத்தில் பங்கேற்பவர்களுக்கு உணவுடன், மது பாட்டில்களையும் கொடுக்கலாம்” என்று கூறுவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவில் குறிப்பிடப்படும் ஊர்வலத்தில் அதிகமாக வந்த கூட்டத்தால் கேஜ்ரிவால், 20-ம் தேதி மனு தாக்கல் செய்யமுடியாமல் 21ம் தேதி மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.