Last Updated : 16 Jan, 2015 03:26 PM

 

Published : 16 Jan 2015 03:26 PM
Last Updated : 16 Jan 2015 03:26 PM

வெடிகுண்டு மிரட்டலால் பிரான்ஸ் ரயில் நிலையம் மூடல்: 10 பேர் கைது

பாரீஸ் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. இத்துடன் அங்கு சந்தேகத்தின்பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள 'தி காரே' ரயில் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு வைத்திருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்கும் நோக்கத்தோடு அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.

மூடப்பட்ட 'தி காரே' ரயில் நிலையம் பாரீஸ் நகரின் முக்கிய மைய ரயில் நிலையம் ஆகும். இந்த நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், "இது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே" என்றார்.

இதனிடையே பாரீஸ் நீதிமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோஷர் பல்பொருள் அங்காடியில் நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்களாகவும் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக இருந்த நபர்களாகவும் கருதப்படும் 10 பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸில் 'தி காரே' ரயில் நிலையம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x