

நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் முன்னுரிமைப் பணியாக இருக்கும் என்று மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தி நகரில் சாலைத் திட்டப் பணி ஒன்றுக்கு நிதின் கட்கரி நேற்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது: சாலை மற்றும் ரயில் போக்கு வரத்து செலவுடன் ஒப்பிடும்போது நீர்வழிப் போக்குவரத்துக்கு செலவு குறைவு. எனவே நீர்வழிப் பாதை களை மேம்படுத்த முன் னுரிமை தரப்படும். ஆஸ்திரேலியா வின் சிட்னி நகரில் நீர்வழிப் பாதையில் படகு பஸ்கள் இயக் கப்படுவது போல மும்பையில் இன்னும் 2 மாதங்களில் படகு பஸ் வெள்ளோட்டம் விடப்படும். மேலும் விமானம் போன்ற படகுகள் இயக்குவது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.
நாட்டில் தற்போது 5 நீர்வழிப் பாதையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மேலும் 101 நீர்வழிப் பாதைகளை போக்குவரத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பனாரஸ் ஹல்டியா (கொல்கத்தா) நீர்வழிப் பாதையில் 12 முனையங்களை ரூ.4,200 கோடி செலவில் மேம்படுத்தும் பணி இன்னும் 2 மாதத்தில் தொடங்கும்.
சர்க்கரை ஆலைகள் மூடப் படுவதை அரசு விரும்பவில்லை. மொலாசஸ், மின்சாரம் மற்றும் எத்தனால் உற்பத்தியில் சர்க்கரை ஆலைகள் ஈடுபடவேண்டும். பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும் போது எத்தனால் மலிவானது. சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.
சாலை விபத்தில் 1.5 லட்சம் பேர் பலி
நாடு முழுவதும் போக்குவரத்து அலுவலகங்கள் நவீனப்படுத்தப் படும். போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன விதிகள் மீறப்படுகிறதா என கண்காணிக்க செயற்கைகோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். வாகன ஓட்டுநர்களில் 30 சதவீதம் பேர் போலி லைசென்ஸ் மற்றும் போதிய பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர்.
நாட்டில் சாலை விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 3 லட்சம் உடல் ஊனம் அடைகின்றனர். இவ்வாறு அவர் கூறஇநார்.