Published : 01 Jan 2015 03:07 PM
Last Updated : 01 Jan 2015 03:07 PM

நாடு முழுவதும் கழிப்பறை பயன்பாட்டின் நிலை என்ன?- ஐ-பேடு, செல்பேசியில் கண்காணிக்க மத்திய அரசு திட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதிதான் 2019-க்குள் இந்தியாவில் திறந்தவெளியை கழிப்பிடங்களாக பயன்படுத்துவதை தடுப்பதாகும்.

இதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் கழிவறைகள் பயன்பாடு எப்படி உள்ளது என்பதை ஐ-பேடு, செல்பேசி மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேசிய அளவிலான நிகழ் நேர கண்காணிப்பு ("real-time monitoring") முறை பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக கூடுதலாக 2 இணை செயலாளர்கள், உள்பட 24 அதிகாரிகள் நியமிக்கப்ப்டுகிறார்கள்.

அதாவது, நாடு முழுவதும் கழிவறை பயன்பாடுகள் குறித்த அறிக்கையை ஐ-பேடுகள், டேப்ளட்டுகள், செல்பேசிகளை பயன்படுத்தி மத்திய குடிநீர், சுகாதார அமைச்சகத்திற்கு, இந்த அதிகாரிகள் அனுப்புவர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தூய்மையான இந்தியாவை உருவாக்க மக்களின் பங்களிப்பையும் வரவேற்பதாகவும் மத்திய குடிநீர், சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2012-ல் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் கிராமபுறங்களில் 40% வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி உள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், பொது இடங்களை கழிவிடங்களாக பயன்படுத்துவதற்கு தனிநபரின் குடும்ப பழக்கமும், அறியாமையுமே காரணம். சுகாதாரம் என்பது சமூக-கலாச்சார விவகாரம் சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் அனைவரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கழிவறையை சுத்தம் செய்ய முன்வர வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x