Published : 04 Jan 2015 12:43 PM
Last Updated : 04 Jan 2015 12:43 PM

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்ததாக துணை ஆட்சியர் மீது மனைவி புகார்: கருத்து வேறுபாடு காரணமாக உண்மையை கக்கினார்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட துணை ஆட்சியர் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்ததாக அவரது மனைவியே புகார் செய் துள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாலேயே அவர் புகார் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அதிகாரிகள் கூறிய தாவது: போடாடு மாவட்ட துணை ஆட்சியர் (தேர்தல்) கமலேஷ் கோர்டியா. இவர் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாக அவரது மனைவியே எங்களிடம் புகார் செய்தார்.

இதுகுறித்து விசாரித்ததில், ரூ.68 லட்சம் மதிப்பிலான பத்தி ரங்கள் மற்றும் மியுச்சுவல் பண்ட் கள், ரூ.32 லட்சம் மதிப்பிலான வீடு, ரூ.1.22 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் இதர முதலீடுகள் என மொத்தம் ரூ.1.04 கோடி மதிப் பிலான சொத்து கோர்டியாவுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

கோர்டியாவின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், வரு மானத்துக்கு பொருந்தாத வகை யில் உள்ளது. எனவே, கோர்டியா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அகமதாபாத்தில் உள்ள ஏசிபி தலைமை அலுவலக ஆய்வாளர் பி.ஏ.ஆர்யா விசாரிப்பார். இது குறித்து கோர்டியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x