இளம்பெண்ணுக்கு சாமியார் பாலியல் தொல்லை டி.வி.யில் வெளியான வீடியோ: பக்தர்கள் அதிர்ச்சி

இளம்பெண்ணுக்கு சாமியார் பாலியல் தொல்லை டி.வி.யில் வெளியான வீடியோ: பக்தர்கள் அதிர்ச்சி

Published on

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சாமியார் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பல இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்வதாக காட்டும் வீடியோ காட்சிகள் கன்னட தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப் பானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பக்தர்கள் அவருடைய ஆசிரமத்தை முற்றுகையிட்டனர்.

குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ (32) கோலார் மாவட்டம் முல்பாகலைச் சேர்ந்தவர்.கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட்டில் 'தேவி ஸ்ரீ திவ்ய ஜோதிட நிலையம் மற்றும் ஆசிரமம்' நடத்தி வருகிறார்.கைரேகை,ஜோதிடம்,ஹோம பூஜைகள்,வாஸ்து,நவகிரக சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட பலவிதமான பூஜைகள் செய்து பிரபலமானார்.

பெரும்பாலான கன்னட தொலைக்காட்சிகளில் ஜோதிடம், பூஜைகள் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.இதனால் கர்நாடகாவில் சில அரசியல்,சினிமா பிரபலங்கள் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீசாமியாரின் பக்தர்களாக மாறினர்.

இந்நிலையில் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ பல இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொள்வது போன்ற வீடியோ காட்சிகள் ஒரு தனியார் கன்னட சேனலில் சனிக்கிழமை ஒளிபரப்பானது. இந்த காட்சிகள் 27-04-2013 அன்று அவருடைய ஜோதிட நிலையத்தில் பதிவு செய்யப்பட்டவை என தெரியவருகிறது. ஒரு கன்னட அமைப்பின் மூலம் இந்த வீடியோ சிடி கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த அவரது பக்தர்களும், நவநிர்மாண் உள்ளிட்ட கன்னட அமைப்புகளும் அவருடைய ஆசிரமத்தை முற்றுகையிட்டனர். சாமியார் தப்பியோடி விட்டதால்,பூட்டப்பட்டிருந்த அவரது ஜோதிட நிலையத்தின் கதவுகளையும் உடைக்க முற்பட்டனர். சாமியாருக்கு எதிராக கோஷமிட்ட கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள்,அவரின் புகைப்படத்தை கொளுத்தினர்.

பாலியல் வன்கொடுமை

தன்னைத் தேடி வரும் இளம்பெண்களுக்கு தோஷம் கழிப்பதாகக் கூறி சாமியார் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். பெங்களூர் வரு வதற்கு முன்பாக கோலாரில் பல இளம் பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட தால், அங்கிருந்து விரட்டப்பட்டார். பாதிக்கப் பட்ட பலர் தங்களுடைய எதிர்காலத்தை கருதி, புகார் அளிக்க முன்வருவதில்லை'' என்று கூறப்படுகிறது.

மறுப்பு

பல்வேறு கன்னட அமைப்புகளும்,பெண் மகளிர் அமைப்புகளும் சாமியார் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாமியார் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ தலைமறைவாகி உள்ளார்.அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் காவல்நிலையத் தில் புகார் அளிக்காததால், இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவரது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது,அவர் பேச மறுத்துவிட்டார். அவருடைய இணையதளத்திலோ,'அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.அது மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ' என அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in