அரபிக்கடல் பகுதியில் ரூ.3,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 5 பாகிஸ்தானியர்கள் கைது

இந்திய கடலோர காவல்படையின் அதிரடி நடவடிக்கை

இந்திய கடலோர காவல்படையின் அதிரடி நடவடிக்கை

Updated on: 
1 min read

புதுடெல்லி: அரபிக்கடலில் ஈரானிய படகு ஒன்றில் இருந்து ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் இணைந்து இந்திய கடலோரக் காவல்படை கடந்த 25ம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையில், அரபிக்கடலில் ஈரானிய படகு ஒன்றில் இருந்து ரூ.3,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 526 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், படகை இயக்கிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உளவுத் தகவல்களின் அடிப்படையில் கடலோரக் காவல்படையினர் கடல் - வான் கண்காணிப்பை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமான அந்த படகை கண்காணித்து, பின்னர் லட்சத்தீவின் மேற்கே அதனை பின்தொடர்ந்து கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட படகு, உயர் ரக மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் ஆகியவை தொடர் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட அதன் பணியாளர்களும் மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடல்வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அமைப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த கைப்பற்றல் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடலோர காவல்படையின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்தி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>இந்திய கடலோர காவல்படையின் அதிரடி நடவடிக்கை</p></div>
மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை - இன்றைய சந்தை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in