Published : 13 Jan 2015 12:34 pm

Updated : 13 Jan 2015 12:34 pm

 

Published : 13 Jan 2015 12:34 PM
Last Updated : 13 Jan 2015 12:34 PM

டோம் அல்பனேஸ் - இவரைத் தெரியுமா?

$ வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இருக்கிறார். இதற்கு முன்பு ரியோ டின்டோ நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிவந்தார்.

$ அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் பிறந்த இவர், கனிம பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், சுரங்கத் தொழிலில் அலாஸ்கா ஃபேர்பாங்ஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

$ ரியோ டின்டோ குழும நிறுவனங்களான நார்த் லிமிடெட், கெனேகோட் உடா காப்பர் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்துள்ளார்.

$ 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.

$ இவான்ஹோ சுரங்க லிமிடெட், பலோபோரா சுங்க நிறுவனம், டார்குயிஸ் ஹில் ரிசோர்சஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இவர் இருந்துள்ளார்.

$ டியூக் பல்கலைக் கழகம், பியூகுவா வணிகக் கல்வி மையம் ஆகியவற்றில் வருகை பேராசிரியராகவும் உள்ளார்.

டோம் அல்பனேஸ்இவரைத் தெரியுமா

You May Like

More From This Category

More From this Author