

இந்தியாவில் காச நோய் (டிபி) வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் இலக்கை எட்டுவதற்கு இந்த வேகம் போதாது என அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி நதா மெனப்தே நேற்று கூறியதாவது:
வரும் 2050-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டுமானால் இந்தியாவில் ஆண்டுக்கு 19 முதல் 20 சதவீத அளவுக்கு இந்த நோயை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இது இப்போது ஆண்டுக்கு வெறும் 2 சதவீதமாக மட்டுமே உள்ளது.
எனினும், இப்போதுள்ள செயல் திட்டம் மற்றும் தொழில்நுட்பங் களை திறம்பட பயன்படுத்தினாலே வரும் 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் கட்டுப்பாட்டை 10 சதவீதமாக அதிகரிக்க முடியும். மேலும் காசநோய் கட்டுப் பாட்டு வேகத்தை அதிகரிக்க புதிய செயல்திறன் மிக்க தடுப்பு மருந்துகள், தொடக்க நிலை யிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற் கான புதிய உத்திகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதேநேரம் ஊட்டச்சத்து குறைபாடு, குடிசைப் பகுதிகளில் மக்கள் நெருக்கம், காற்றோட்ட வசதி இல்லாதது, புகைப் பழக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டியது அவசியம். நகர்ப்புற காச நோயாளிகளில் பலர் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை எடுத்துக் கொள் கின்றனர். ஆனால் திருப்திகரமாக இல்லை. கடுமையான விதிமுறைகளின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.