இந்தியாவில் ஒபாமா: கவனத்தை ஈர்த்த பயணம் - ஃபேஸ்புக் நிறுவனர் விரும்பிய படம்

இந்தியாவில் ஒபாமா: கவனத்தை ஈர்த்த பயணம் - ஃபேஸ்புக் நிறுவனர் விரும்பிய படம்
Updated on
1 min read

டெல்லி விமான நிலையத்தில் ஒபாமா வந்திறங்கியவுடன், பிரதமர் நரேந்திர மோடி அவரை கட்டித்தழுவி வரவேற்கும் புகைப்படம், பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது பிற்பகல் 2.15 மணியளவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் படத்துக்கு ‘லைக்’ தெரிவித்திருந்தனர். சுமார் 25 ஆயிரம் பேர் கருத்து கூறியிருந்தனர்.

படத்துக்கு ‘லைக்’ கொடுத்தவர்களில் ஃபேஸ்புக் நிறுவனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க்-கும் ஒருவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in