

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது 3 நாள் இந்திய பணத்தை நிறைவு செய்து கொண்டு இன்று மதியம் சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
66-வது குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவருடன் அவரது மனைவியும் வந்திருந்தார்.
25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒபாமா கலந்து கொண்டார். 26-ம் தேதி குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார். இன்று டெல்லியில் அவர் பேருரை ஆற்றினார்.
அதனை முடித்துக் கொண்டு பிற்பகலில் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு வந்த அவர் அங்கிருந்து அவரது தனி விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
அவரை இந்திய வெளியுறவு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.