

இந்திய மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் அமெரிக்கா வந்து கல்வி பயில்கின்றனர். அதேபோல் எதிர்காலத்தில் அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும் என தான் விரும்புவதாக அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக டெல்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
அப்போது அவர், "அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும் என விரும்புகிறேன். தற்போது இந்திய மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் அமெரிக்கா வந்து கல்வி பயில்கின்றனர்.
அதேபோல் எதிர்காலத்தில் அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும். இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும்போது நம் தேசம் வலுப்பெறும்" என்றார் ஒபாமா.