சீன கம்யூனிஸ்ட் சாதனையை முறியடிக்க பாஜக திட்டம்: 10 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க முடிவு

சீன கம்யூனிஸ்ட் சாதனையை முறியடிக்க பாஜக திட்டம்: 10 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க முடிவு
Updated on
1 min read

நாடு முழுவதும் 10 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உலக சாதனையை முறியடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி 6.48 கோடி உறுப்பினர்களை சேர்த்து உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவை மற்றும் 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, நாடு முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை பாஜக கடந்த நவம்பரில் தொடங்கியது. மார்ச் மாதத்துக்குள் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உறுப்பினர் சேர்க்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் துணைத்தலைவருமான தினேஷ் சர்மா கூறும்போது, “நரேந்திர மோடியின் நல்லாட்சி காரணமாக பாஜகவில் சேர மக்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த 2 மாதங்களில் 2.3 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இதில் உ.பி.யில் மட்டும் 77 லட்சம் ஆகும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in