காஷ்மீரில் 57 கிராமங்கள், 13 எல்லைச் சாவடிகளில் அத்துமீறல்: பாக். ராணுவ தாக்குதலில் 3 பேர் பலி - 11 பேர் காயம், 1,400-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

காஷ்மீரில் 57 கிராமங்கள், 13 எல்லைச் சாவடிகளில் அத்துமீறல்: பாக். ராணுவ தாக்குதலில் 3 பேர் பலி - 11 பேர் காயம், 1,400-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
Updated on
2 min read

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள 57 கிராமங்கள், 13 எல்லைச் சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள், ஒரு பெண் பலியாயினர். 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியிலிருந்த சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து எல்லை பாது காப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகேஷ் சர்மா நேற்று கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் மற்றும் கதுவா மாவட் டத்தின் ஹிராநகர் பகுதிகளில் சர்வ தேச எல்லையில் உள்ள கிராமங்கள் மற்றும் எல்லைச் சாவடிகள் மீது வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை யடுத்து நமது எல்லைப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி னர். இருதரப்புக்கும் இடையே நீடித்த சண்டை சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முடிந்தது.

பின்னர் காலை 7 மணிக்கு மீண்டும் தாக்குதலை தொடங் கியது. இதற்கு நமது படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதால், எல்லையோரம் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சம்பா மாவட்ட காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அனில் மகோத்ரா கூறும்போது, “பாகிஸ்தான் தாக்குதலில் மங்கு சக் கிராமத்தைச் சேர்ந்த டோரி தேவி உயிரிழந்தார். மேலும் பொது மக்களில் 5 பேர் காயமடைந் தனர். இதுதவிர, வீடுகள் சேதமடைந்ததுடன் கால்நடை களும் காயமடைந்தன. இதை யடுத்து எல்லை கிராமங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி வருகிறோம்” என்றார்.

கதுவா மாவட்ட காவல் துறை துணை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறும்போது, “பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் கதுவா மாவட்டம் நவுசாக், சான் லால்தின் கிராமங்களைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். காயமடைந்தவர் களுக்கு உதவுவதற்காக ஹிரா நகர் பகுதிக்கு மருத்துவர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாது காப்பு நடவடிக்கைகள், நிவாரண முகாம்கள் தொடர்பான தகவலை பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு கிராம தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

இருதரப்பினருக்கும் நடை பெற்ற சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலியானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதவிர ராணுவ வீரர் ஒருவரும் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடுருவல் முறியடிப்பு

கடும் சண்டைக்கு நடுவே சம்பா மாவட்டம் கோர் கலி பகுதியில் ஆயுதம் ஏந்திய சுமார் 8 தீவிரவாதிகளை வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு இந்திய எல்லைக்குள் நுழைக்க பாகிஸ்தான் வீரர்கள் முயன்றுள் ளனர். இதை அறிந்த நமது எல்லைப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

550 முறை அத்துமீறி தாக்குதல்

2014-ம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 550 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு ஓராண்டில் நடைபெற்ற அதிகபட்ச தாக்குதல் இதுவாகும். ஓராண்டில் 5 வீரர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். 150 பேர் காயமடைந்தனர்

கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத் தில் தாக்குதல் உச்சத்தில் இருந்தது. இதில் மட்டும் 13 பேர் கொல்லப் பட்டனர். 32 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வீடுகளைவிட்டு வெளி யேறி முகாம்களில் தங்கவைக் கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in