Published : 16 Jan 2015 12:13 PM
Last Updated : 16 Jan 2015 12:13 PM

தலித்துகளுக்கு எதிரானது பா.ஜ.க: மாயாவதி குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

தனது 59-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் செய்தியாளர்களிடம் மாயாவதி பேசியதாவது:

'' பா.ஜ.க தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது. தலித் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆனாலும், தலித்துகளுக்கு எதிரான கட்சி பா.ஜ.க. டெல்லியில் பா.ஜ.க வெற்றி பெறும் நிலையில் இட ஒதுக்கீட்டு முறை பின்னுக்கு தள்ளப்படும்.

பாஜக மட்டுமல்ல ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவாலும் தலித்துகளுக்கு எதிரானவரே.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.'' என்று மாயாவதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x