Last Updated : 29 Jan, 2015 09:02 PM

 

Published : 29 Jan 2015 09:02 PM
Last Updated : 29 Jan 2015 09:02 PM

பிப். 5-ஆம் தேதி வரை கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தினமும் 5 கேள்விகள்

பிப்ரவரி 5-ஆம் தேதி வரை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தினசரி 5 கேள்விகளைக் கேட்க முடிவு செய்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பாஜக தன் முழு பலத்தையும் திரட்டி பிரச்சாரத்தில் களமிறங்குகிறது. அதில் பிரதான இலக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஜ்ரிவாலிடம் தினமும் 5 கேள்விகளை பாஜக தலைவர்கள் கேட்க முடிவு செய்துள்ளனர்.

இந்த 5 கேள்விகளில் காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடமாட்டேன் என்று கூறிவிட்டு பிறகு அந்தக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது ஏன்? மேலும் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பிறகு அது தொடர்பான ஆவணங்களை வெளியிடாதது ஏன்? அவர் மீது வழக்கு தொடராதது ஏன்? என்ற கேள்விகள் இன்று கேட்கப்பட்டுள்ளது.

முதல்வராக ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு வைத்துக் கொண்டார். மாருதி காரில் செல்லும் ஒரு சாமானியனாக தன்னை காண்பித்து கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்ற பிறகு தன் அமைச்சர்களுக்கு ஆடம்பர கார்களுக்கு ஆர்டர் செய்தது ஏன்?

ஏன் தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தினார், அதில் ஏன் பிசினஸ் வகுப்பில் பிரயாணம் செய்தார்? போன்ற சரமாரி கேள்விகளை பாஜக கேட்டுள்ளது.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக 20 மத்திய அமைச்சர்களையும், நாடு முழுவதிலிமிருந்து 120 எம்.பி.க்களையும் டெல்லி முழுதும் பிரச்சாரம் மேற்கொள்ள களமிறக்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக கவலையடைந்துள்ளதா? ஏன் கட்சியின் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்ட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடி, “இது சாதாரண தேர்தல் நடைமுறைதான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x