Published : 17 Jan 2015 11:56 AM
Last Updated : 17 Jan 2015 11:56 AM
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார்.
தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் ஜஹூர் அகமது தர். இவர் இன்று காலை பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மோட்டார் சைக்களில் பின்புறம் அமர்ந்திருந்தார்.
அவர்கள் ருட்வினா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, மறைந்திருந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.