ரங்கசாமி தவறை உணர்ந்தால் அ.தி.மு.க-வை ஆதரிப்பார்- புதுவை அ.தி.மு.க செயலாளர் அதிரடி

ரங்கசாமி தவறை உணர்ந்தால் அ.தி.மு.க-வை ஆதரிப்பார்- புதுவை அ.தி.மு.க செயலாளர் அதிரடி
Updated on
1 min read

புதுச்சேரியில் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் என்.ஆர்.காங் கிரஸுக்கு கைகொடுத்த அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் வேட்பாளரை நிறுத்துகிறது.

புதுவை தொகுதியை காங் கிரஸ் அதிக முறை கைப்பற்றி இருந்தாலும், இம்முறை அவர் களுக்கு வெற்றி எளிதாக கிடைக்க வாய்ப்பு இல்லை. ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து, 21 இடங்களை பிடித்தது. இதில் 5 இடங்களைப் பிடித்த அ.தி.மு.க-வை விலக்கிவிட்டு, சுயேச் சைகளின் ஆதரவுடன் ஆட்சி யமைத்தார் ரங்கசாமி.

தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் – அ.தி.மு. க கூட்டணி உடைந்து போனதால் இப்போது புதுவையில் வித்தியாச மான அரசியல் சூழல் நிலவு கிறது. என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க-வுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அணியில் தி.மு.க இணையும் சாத்தியங்கள் தென் பட வில்லை. இதில் ஏதாவது ஒரு அணியில்தான் விஜயகாந்த் இருப்பார் என்பதால் புதுச்சேரி மக்களவைத் தொகு தியில் நான்கு முனைப் போட்டி உறுதி யாகிவிட்டது. இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே இங்கு வெற்றிபெற்றிருக்கும் அ.தி.மு.க, இம்முறை கம்யூனிஸ்ட்கள் கூட்டணியுடன் இங்கே வேட் பாளரை நிறுத்தும் முடிவில் இருப்பதாக புதுச்சேரி அ.தி.மு.க வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

‘தி இந்து’விடம் இதுகுறித்து பேசிய புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கூறியதாவது: “இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையில் அ.தி.மு.க கம்யூனிஸ்ட்டுகளோடு இணைந்து செயல்படும். தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து

20-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர் கூட்டணி தொடர்பாக என்.ஆர். காங்கிரஸுடன் நாங்கள் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் எங்களோடு கூட்டணி வைத்து வெற்றிபெற்ற ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு தனது செயல்பாடுகளை மாற்றிக் கொண்டார். அதனால் அவருடன் இப்போது எவ்வித அரசியல் தொடர்பும் அ.தி.மு.க-வுக்கு இல்லை. தான் செய்தது தவறு என ரங்கசாமி உணர்ந்தால், வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரிக்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in