பேஸ்புக், ட்விட்டரில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்

பேஸ்புக், ட்விட்டரில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரத்தில் சமூக இணையதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் அரசியல் பிரபலங்கள் பரபரப் பாக இயங்கி வருகின்றனர். அதே சமயம் மொபைலில் பிரபலமாக உள்ள வாட்ஸ்அப் தேர்தல் பிரச்சாரத்தில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில், வேட்பாளர்கள் தங் களின் சமூக இணையதளக் கணக்கு விவரங்களையும் தெரி விக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், வாட்ஸ் அப் விவரத்தை மிகச் சிலரே தெரிவித் துள்ளனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கனும் ஒருவர்.

அதே சமயம், காங்கிரஸ் இளம் தலைவர்களான ஜோதிரா தித்ய சிந்தியா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் தங்களின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்கு விவ ரங்களைத் தெரிவிக்கவில்லை.

நரேந்திர மோடியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவால் வரை சமூக இணையதளங்களில் அதி களவு கருத்துகளை வெளி யிட்டு வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, அருண் ஜேட்லி ஆகியோர் தொடர்ந்து வலைப் பூவில் எழுதி வருகின்றனர்.

சட்ட அமைச்சர் கபில் சிபில் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டுமின்றி, ட்விட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக இணையதள பக்கங்களிலும் அடிக்கடி தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், ட்விட்டரில் அதிகமாகக் கருத்துகளைத் தெரிவித்து வரு கிறார். அவர் தன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கருத்து களைப் பதிவிடுகிறார்.

விலகி நிற்கும் சோனியா குடும்பம்

முக்கியத் தலைவர்கள் அனைவரும் சமூக இணையதளத்தின் பரபரப்பாக இயங்கிவரும் சூழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ட்விட்டர், பேஸ்புக் கணக்குகளை வைத்திருக்கவில்லை. பிரியங்கா காந்தியும் சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துவதில்லை.

-பி.டி.ஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in