Published : 12 Apr 2014 12:00 AM
Last Updated : 12 Apr 2014 12:00 AM

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: சமாஜ்வாதி மூத்த தலைவர் அபு ஆஸ்மி சர்ச்சைப் பேச்சு

பாலியல் பலாத்காரம் செய்த ஆண்களைப் போலவே, பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களையும் தூக்கிலிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மிட்-டே பத்திரிகையில் செய்தி வெளியாகி யுள்ளது. அதில் ஆஸ்மி பேசிய தாகக் கூறியுள்ளதாவது:

பாலியல் பலாத்காரம் மரண தண்டனைக்குரிய குற்றம் என இஸ்லாம் கூறுகிறது. ஆனால், இங்கு ஆண்கள் மட்டுமே தண் டனை பெறுகின்றனர். பெண்ணும் தவறிழைத்தவர்தான்.

இந்தியாவில் ஒருவரின் ஒப்புத லுடன் உடலுறவு வைத்துக் கொள் ளலாம்; அது தவறில்லை. ஆனால், அதே நபர் புகார் தெரி வித்தால் பிரச்சினையாகி விடு கிறது. இப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்களை ஏராளமாக நாம் பார்க்கிறோம்.

யாராவது தம்மைத் தொட்டால் பெண்கள் புகார் செய்கின்றனர்; சில சமயம் யாரும் தொடாதபோதும் புகார் செய்கின்றனர். இது பிரச் சினையாகிறது. ஆண்களின் கவுரவும் குலைக்கப்படுகிறது.

பாலியல் பலாத்காரம் சம்மதத் துடனோ, சம்மதமின்றியோ நடை பெற்றால் அதற்கு இஸ்லாமில் கூறியபடி மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு பெண்ணும், அவர் திருமணமானவரோ ஆகாதவரோ, விருப்பத்துடனோ விருப்பமின்றியோ ஒரு வேற்று ஆணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அவர் தூக்கிலிடப்பட வேண்டும். இருவருமே தூக்கிலிடப்பட வேண்டும். ஒரு பெண் தன் விருப்பத்துடன் வேறொரு ஆணுடன் உறவு கொள்வதை அனுமதிக்கக் கூடாது. பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க ஒரே தீர்வு இதுதான். இவ்வாறு ஆஸ்மி தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள். இளம்வயதினர் தவறி ழைப்பது சகஜம். அவர்களைத் தூக்கிலிடக் கூடாது எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆஸ்மி, பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணையும் தூக்கிலிட வேண்டும் எனக் கூறியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குவியும் கண்டனம்...

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மூத்த தலைவர் அபு ஆஸ்மி ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எழுத்தாளர் இமையம்:

ஆண்களுக்கு கர்ப்பப்பை இருந்திருந்தால் இதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறு வார்களா? நமது ஆணாதிக்க, சாதிய சமுதாயம் இப்படிப்பட்ட கருத்துகளை பேசக் கூடிய சௌகரியத்தை தந்திருக்கிறது. ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட பெண்களை சந்தோஷ கருவி களாகத்தான் பார்ப்பார்கள் என்பதை இந்த கருத்துகள் வெளிப் படுத்துகின்றன.

சமூக ஆர்வலர் வ.கீதா:

இவர்கள் வேண்டுமென்றே கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பேசுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை இயல்பாக எடுத்து கொள்ள வேண்டுமென்றால், இயல்பாக ஆண்கள் வக்கிர புத்தியுடையவர்கள், இம்சிக்கக்கூடியவர்கள் என்று கூறுகிறாரா? இவர்கள் பெண்களைப் பற்றி எப்போதுமே உயர்வாக பேசியதில்லை.

மருத்துவக் கல்லூரி மாணவி ஷில்பா:

திருமண உறவுக்கு அப்பாற்பட்ட உடலுறவு கொள்ளும் பெண்களை தூக்கிலிட வேண்டுமானால், மனைவியைத் தவிர வேறு பெண்களுடனும், பாலியல் தொழிலாளிகளுடனும் உடலுறவு கொள்ளும் ஆண்களை என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்? ஆண் தவறு செய்தால் “கொஞ்சம் அனுசரித்துப் போ” என்று கூறும் இந்த சமூகத்துக்கு பெண்ணை தூக்கிலிட வேண்டும் என்று கூறும் தகுதியில்லை.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x