Last Updated : 02 Jan, 2015 10:50 AM

 

Published : 02 Jan 2015 10:50 AM
Last Updated : 02 Jan 2015 10:50 AM

குஜராத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்திகை: இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததாக‌க் குற்றச்சாட்டு

குஜராத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்திகையின்போது இஸ்லாமியர்களை தீவிரவாதி களாகச் சித்திரத்ததாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இந்த மாதம் 11 முதல் 13ம் தேதி வரை குஜராத்தில் முதலீட்டு மாநாடு நடக்கவுள்ளது. அதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பாது காப்பு வழங்குவதற்காக குஜராத் மாநில போலீஸார் தீவிர வாதத்துக்கு எதிரான ஒத்திகை ஒன்றை நடத்தினர். அப்போது, ஐந்து போலீஸார் மூன்று தீவிர வாதிகளைப் பிடிப்பது போன்று ஒரு காட்சி இருந்தது.

அதில் தீவிரவாதிகளாக நடித்த மூன்று பேரும் இஸ்லாமியர்களைப் போல உடையணிந்து இருந்தனர். இதனால் இஸ்லாமியர்களை தீவிர வாதிகளாகச் சித்தரிப்பதாகப் பலரும் விமர்சித்திருந்தனர்.

அனைத்திந்திய இஸ்லாமிய சட்ட வாரியத்தைச் சேர்ந்த கமல் பரூக்கி இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிடும்போது, "மிக அராஜகமானதும் கண்டிக்கத் தக்கதுமாகும்" என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி, "தோல்வியடைந்த நிர்வாகத்தின் மத சகிப்பின்மையையே இது காட்டுகிறது" என்று விமர்சித் துள்ளது.

மோடி பிரதமர் ஆனது முதல் நாடு முழுக்க உள்ள இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இந்து மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டு வருவதன் மூலமும், இதுபோன்ற சம்பவங்கள் மூலமும் பாரதிய ஜனதா கட்சி அரசின் மத சகிப்பின்மை அதிகரித்து வருவ தாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x