

ராய்பரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பக்ருதீன் போட்டியிடுகிறார். இவர் 2014 மக்களவை தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் ஓய்வு பெற்ற நீதிபதியாவார்.
சோனியாவை நீதிபதி எதிர்த்துப் போட்டியிடும் அதேசமயம், அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அஜய் அகர்வால் போட்டியிடுகிறார்.
லால் பகதூர் சாஸ்திரியின் பேரனான ஆதர்ஷ் சாஸ்திரி, உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத்தில் ஆம் ஆத்மி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் லக்னோவில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை எதிர்த்து போட்டி யிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தின் தென் சென்னை தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக ஜாஹிர் உசைன் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை பிராட்வேயில் வசிப்பவரான ஜாஹிர், ஊழல் ஒழிப்பு மற்றும் சமூக ஆர்வலரான அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது அதை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர்.