Published : 27 Jan 2015 12:05 PM
Last Updated : 27 Jan 2015 12:05 PM

டீ விற்பவர் பிரதமராக முடியும்: மோடிக்கு ஒபாமா புகழாரம்

ஜனநாயகத்தில் மட்டுமே டீ விற்பவர் பிரதமராக முடியும், ஒரு சமையல்காரரின் பேரன் குடியரசுத் தலைவராக முடியும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா - அமெரிக்கா உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக டெல்லியில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, "தனிநபர் மரியாதைக்கு நாம் மதிப்பளிக்கும்போதே நாம் வலியவர் ஆகிறோம். அமெரிக்கா எனக்கு நிறைய கொடைகள் வழங்கியிருந்தாலும், என் வாழ்வில் நிற பேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

இழிவாக கருதப்படும் தொழிலை செய்பவர்கள் காணும் கனவுகூட மேன்மையானதே. அதிர்ஷ்டவசமாக நாம் கனவு காண சுதந்திரம் உள்ள நாடுகளில் பிறந்திருக்கிறோம்.

அதனால்தான், அமெரிக்காவில் ஒரு சமையல்காரரின் பேரன் அதிபராக முடியும், இந்தியாவில் ஒரு டீ விற்பவர் பிரதமராக முடியும் (அதிபர் என தன்னையும், பிரதமர் என நரேந்திர மோடியையும் குறிப்பிட்டார்)" என்றார் ஒபாமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x