

ஆந்திர மாநிலத்தின் தெலங்கானா, சீமாந்திரா பகுதிகளில் சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக வரும் 30-ம் தேதி மற்றும் மே 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி கட்சி தலைவர்கள் தெலங்கானா மற்றும் சீமாந்திரா பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ளனர்.
தெலுங்கு தேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நவீன தகவல் தொழில்நுட்ப மான 3டி மூலம், புதன்கிழமை முதல் ஒரே சமயத்தில் 20 இடங்களில் பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளார்.
நிஜாமாபாத்தில் தெலங் கானா ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அனந்தபூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஆந்திரா - கர்நாடகா எல்லையில் உள்ள கோலார், ராய்ச்சூர், குல்பர்கா ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.
இரண்டொரு நாட் களில் காங்கிரஸ் கட்சிதலை வர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தெலங்கானாவி லும், தொடர்ந்து சீமாந்திரா விலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இதனிடையே பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகிய மூவரும் வரும் 24, 26-ம் தேதிகளில் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.