

ஹரியாணாவில் ஆளில்லா ரயில்வே கேட்டில் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
ஹிசார் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சர்சோத் என்ற கிராமத்தில் நேற்று காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் சிக்கிய அனைவரும் ஹிசார் மாவட்டத்தின் பாலக் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வேனில் சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில் பஞ்சாபின் துரி நகரில் இருந்து ஹரியாணாவின் சிர்சா நகரை நோக்கி வந்துகொண்டி ருந்த பாசஞ்சர் ரயில் இவர்களின் வேன் மீது மோதியது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ரயில் வருவது ஓட்டுநருக்கு புலப்படாமல் போனதால் இந்த விபத்து நிகழ்ந்தி ருக்கலாம் என போலீஸார் தெரி வித்தனர். காயமடைந்த மூவரும் ஹிசார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்களில் வேன் ஓட்டுநரும் ஒருவர் என ரயில்வே போலீஸார் கூறினர்.