Published : 02 Jan 2015 11:19 AM
Last Updated : 02 Jan 2015 11:19 AM

ஜிம் ஓ நீல் - இவரைத் தெரியுமா?

$ இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான இவர், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர். மான்செஸ்டரில் பிறந்தவர். இவரது தந்தை தபால்காரர்.

$ ஷெப்பீல்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். 1982-ம் ஆண்டு சர்ரே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். லண்டன் பல்கலைக்கழகத்தின் கவுரவ முனைவர் பட்டமும் பெற்றவர்.

$ பேங்க் ஆப் அமெரிக்காவில் டிரசரி நிர்வாகத்தில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர். ஸ்விஸ் பேங்க் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1988-ம் ஆண்டு இணைந்தார். 1991 முதல் 95 வரை இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி பிரிவுக்குத் தலைமை ஏற்றார்.

$ 1995-ம் ஆண்டு கோல்ட்மென் சாக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். (இணைத்தலைவர் - பொருளாதார ஆராய்ச்சி). 2010-ம் ஆண்டு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் (சொத்துகளை கையாளும் பிரிவு) தலைவரானார். 2013-ம் ஆண்டு தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

$ பிரிக் (BRIC) என்னும் பதத்தை உருவாக்கியவர் இவர்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x