Published : 05 Apr 2014 04:52 PM
Last Updated : 05 Apr 2014 04:52 PM

தேசிய அரசியலில் இடதுசாரிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது: கேரள தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு

தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசியலில் இடதுசாரிக் கட்சிகள் முக்கிய பங்கு எதையும் வகிக்கப் போவதில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

கேரள மாநிலம் காசர்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: "தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசியலில் இடதுசாரிக் கட்சிகள் முக்கிய பங்கு எதையும் வகிக்கப்போவதில்லை. எனவே, இங்கு (காசர்கோடு) மார்க்சிஸ்ட் கட்சியை வெற்றி பெறச் செய்தால், அது மறைமுகமாக பாஜகவிற்குத்தான் சாதகமாக அமையும்.

பாரதிய ஜனதா கட்சி மோதலை தூண்டி சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. ஆனால், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் ஒருங்கிணைத்து நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது.

இந்த நாட்டில் பாதுகாவலராக இருப்பேன் என்று சமீபத்தில் ஒரு தலைவர் (நரேந்திர மோடி) தெரிவித்திருந்தார். இந்திய மக்கள் அனைவரும் தேசத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

ஜனநாயக அரசியலில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 15 கோடி பேரை வறுமைக்கோட்டிலிருந்து மீட்டுள்ளோம். மீண்டும் எங்களை வெற்றி பெறச் செய்தால், மீதமுள்ள 70 கோடி பேரையும் வறுமையின் பிடியிலிருந்து மீட்போம். இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தொழில்களைப் பெருக்கி, 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும் அளவுக்கு கேரளத் தில் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. காசர்கோட்டில் என்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்தின் தாக்கத் தால் பாதிக்கப்பட்டோரின் மறு வாழ்வுக்குத் தேவையான நட வடிக்கைகளை காங்கிரஸ் கட்சி செய்யும். கேரளத்தில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, பல்வேறு நலத்திட்டப் பணிகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் நிறை வேற்றி வருகிறது" என்றார்.

பின்னர் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச் சூழலை பாதுகாப்பது தொடர் பான கஸ்தூரி ரங்கன் அறிக்கை குறித்தும், அதற்கு மக்களி டையே காணப்படும் அதிருப்தி தொடர்பாகவும் ராகுல் காந்தி பேசியதாவது: "மக்களின் விருப்பத் துக்கு மாறான எந்தவொரு செயலிலும் காங்கிரஸ் அரசு ஈடுபடாது என்று உறுதியளிக் கிறேன். இந்த பகுதியில் உள்ள மக்களை பாதிக்கும் வகையிலான செயல் எதுவும் நடைபெறாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x