

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சுவிஸ் நிதி அமைச்சர் ஈவ்லின் விட்மெரை சந்தித்து ஜேட்லி ஆலோசனை நடத்தினார். அப்போது கருப்பு பண விவகாரம் குறித்து இரு அமைச்சர்களும் 40 நிமிடங்கள் பேசினர். இதுகுறித்து பின்னர் ஜேட்லி கூறியதாவது:
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள் ளவர்களின் விவரங்களைத் திருடி வெளியிடப் பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியாவுக்கு எந்தத் தகவலும் அளிக்க முடியாது என்று சுவிஸ் அரசு தெளிவாக கூறி உள்ளது. எனவே, நாங்கள் தனிப்பட்ட முறையில் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்களின் விவரங்களைத் திரட்டி இருக்கிறோம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் விவரங்களை அளித்து முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சுவிஸ் அரசு கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விரைந்து நடத்தவும் ஒத்துழைப்பதாக சுவிஸ் தெரிவித் துள்ளது. இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
சிஐஐ - பிசிஜி கூட்டத்தில் ஜேட்லி பேசுகையில், ‘‘கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்’’.